பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர் விடுதலை!

Share

தன்னிடம் கற்ற மாணவர்களுக்கு தீவிரவாதத்தை போதித்ததாக கூறி கைது செய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்து புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டமா அதிபர் முன்வைத்த சாட்சியங்கள் ஊடாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது போயிருப்பதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில் சிலா­வத்­துறை பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைதானார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான காலகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டு அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் கைது செய்யப்பட்டார்.

அஹ்னாப் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக நிரூ­பிக்க வழக்குத் தொடுநர் தரப்பு அல்­லது அரச தரப்பு நீதி­மன்றம் முன்­னி­லையில் கொண்­டு­ வந்த சாட்­சி­யா­ளர்­கள் புத்­தளம் மேல் நீதி­மன்றின் தீர்ப்பின் ஊடாக அடிப்படையற்றதென தெரியவந்துள்ளது.

புத்­தளம் மேல் நீதி­மன்றில் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் இந்த வழங்கு விசா­ரணைகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு