யாழ்ப்பாணம் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 3 கிலோகிராம் 686 கிராம் நிறையுடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.