மனித உரிமைககளை மீறும் அளவிற்கு வீதித் தடை போட்டு மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸ் உயிரிழந்த பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் புதிதாக வீதித் தடைகளை போட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வீதித் தடையானது மனித உரிமைககளை மீறும் அளவிற்கு காணப்படுவதுடன். குறித்த வீதித் தடையில் குத்தக் கூடிய கூரான கம்பிகள் காணப்படுகின்றன.
குறித்த வீதியானது காரைநகர் கசூரினா கடற்கரைக்கு செல்லும் பிரதான வீதியாக காணப்படுகிறது.
மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய பெலிசாரே அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுடன் அவர்களது அன்றாட பயணங்களிலும் இன்னல்களை ஏற்படுத்துவது அந்த பாதையால் பயணம் செய்யும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துகின்றது.