களவாடிய சொத்துக்களை கொண்டுவர அரசு எடுத்த முயற்சிதான் என்ன?

Share

நாட்டிலிருந்து களவாடப்பட்டுள்ள சொத்துக்களை மீள கொண்டு வர வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முயற்சி செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் என்ற ரீதியில் நிலைமாறு கால நீதி என்பது காணாமல் போனோர் தொடர்பில் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பில் சபையிலோ அல்லது இந்த அரசாங்கத்திடமோ பேசிப்பயனில்லை.

இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சர்களும் கடந்த காலப்பகுதியில் எவ்வாறு நடந்து கொண்டனர் என நாம் பார்த்தோம்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பார்க்கும் போது நல்லிணக்கத்துக்கு எதிர்மாறாகத்தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

அதாவது இந்த நாட்டில் நல்லிணக்கம் பற்றி பேசி பிரயோசனம் இல்லை. ஆகவே இந்த விடயம் பற்றி நான் பேச போவதும் இல்லை.

ஆனால் இலங்கையில் அனைவரும் எதிர்பார்க்கின்ற இலங்கை பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு ஊட்பட்டதற்கு பிற்பாடு நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிலைக்கு கொண்டு வர வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் இருந்தன.

ஏனென்றால் வெளிநாட்டு தொடர்புகள் சர்வதேச தொடர்புகள் ஊடாக இந்த நாட்டுக்கும் சொத்துக்களை கொண்டு வரக்கூடிய பல வழிகளை அவர்கள் கண்டறிந்திருக்க வேண்டும்.

IMF உடன்பாட்டை மேற்கொண்டோம். கடன் மீள் கட்டமைப்பு இருந்தாலும் இதை எப்போதும் இதனை திருப்பி செலுத்தத்தான் வேண்டும்.

இதற்காக முதலீடு மேம்பாடுகள் வேண்டும், உல்லாசப்பயணிகளை கவர வேண்டும், இந்த விடயத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பாரிய பொறுப்பாற்ற வேண்டி இருந்தது.

இந்த அமைச்சு இந்தவிடயம் தொடர்பான பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதனை நாங்கள் காண்பதில்லை.

இது தனிப்பட்ட ஒரு விமர்சனம் இல்லை. நாங்கள் காண்பதை தான் சொல்கின்றோம். ஏனென்றால் ஏராளமான நாடுகள் இலங்கையுடன் கொண்டிருந்த தொடர்புகளை முறித்தன. அது சீர் செய்யப்பட்டிருக்கின்றதா?

G.S.P+ சலுகையை நாங்கள் விழுந்து மன்றாடி பெற்று கொண்டோம். அதை நீடித்து வைத்திருக்க அரசாங்கம் என்ன செய்கின்றது.

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த களவு செய்யப்பட்ட சொத்துக்களை கொண்டு வர என்ன செய்திருக்கின்றது?

நிதியை களவாடிய ராஜபக்சவாக இருக்கலாம், வேறு தலைவர்களாக இருக்கலாம். இந்த நாட்டிலிருந்து களவாடப்பட்ட பணத்தை இந்த நாட்டுக்குள் கொண்டுவர இந்த அமைச்சு செய்திருக்கின்ற எத்தனிப்பு என்ன? என்பதனை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

https://youtu.be/2uPKNiA8rmU?si=vjCMThbUtBijtz3j

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு