துரத்தி துரத்தி இரு சகோதரர்கள் மீது வாள் வெட்டு!

Share

வவுனியா – ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது துரத்தித்துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.

இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

https://youtu.be/2uPKNiA8rmU

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு