சம்பள உயர்வு கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள பத்தரமுள்ள – பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த ஆர்பாட்டத்தில் அதிகளவானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை காட்டி வருகின்றார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதியளவு நிதி ஒடுக்கப்படாத காரணத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.