யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று மாலை 5.30 இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்துள்ளனர்.
இதன்போது ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினரை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஏனையவர்கள் தப்பித்து செல்லஇ ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திய கும்பல் மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்ளது.
பொலிஸ் நிலையம் முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வாள்வெட்டு குழுவை துரத்தி சென்ற போதும் ஹயஸ் வானில் குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.
ஹயஸ் வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரியவருகிறது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.