குர்ஆனையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பொய்யான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கொழும்பு ஹோட்டலில் தேசிய படை அமைப்பினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பிலான வழக்குஇ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இன்று நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.