போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இரண்டு இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் கட்டார் செல்வதற்காக இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் விமான போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கிய ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து விமான நிலையத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய பெண்னொருவரும் யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையை சேர்ந்த 26 வயதுடைய பெண்னொருவருமே கைதாகியுள்ளனர்.
https://youtu.be/t079Wh-hCXs?si=t0zaAQhxr87NG_VA