இன்னும் சில மணி நேரங்களில் தாழமுக்கம் புயலாக மாறும்!

Share

தென்மேற்கு வங்களா விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த சூறாவளி இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு விலகி நாளையதினம் வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர் நாளை மறுதினம் தெற்கு ஆந்திர கடற்பரப்பை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இதன்காரணமாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் காலியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தை அந்த திணைக்களம் கோரியுள்ளது,

https://youtu.be/t079Wh-hCXs?si=C9qg-JFdBd8vcLxb

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு