பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்!

Share

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் : கைதுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் நாடாளுமன்றல் உருயாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்ற போது மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிதாக கைது செய்யப்படுகின்றார்கள்.

அண்மையில் கூட இவ்வாறு பலர்கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இறந்தவர்களை நினைவுகூருகின்ற நிகழ்வுகளிலே கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பிலே தரவை பகுதியிலே நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு ஒலிபெருக்கி கட்டுவதற்குச் சென்ற தந்தையும் அவருடன் சென்ற உயர்தர வகுப்பில் படிக்கின்ற மகனும் கைது செய்யப்பட்டி ருக்கின்றார்கள். அவர்கள் கடந்த வருடமும் கட்டியிருக்கின்றார்கள். இந்த வருடமும் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது இப்படியொரு நிலைமை இருக்கின்றது என்று இதிலே அந்த மாணவர் இந்த டிசம்பரிலே உயர்தர பரீட்சை எடுக்க வேண்டியிருக்கின்றது. அவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

அவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் படிக்கின்ற நியூட்டன் தனுசன் ஆவர். அவருக்கு அது ஒரு தொழில். அவரின் தந்தைக்கு அதை வைத்துத்தான் அவர்களின் குடும்பம் நடக்கின்றது. அவர் தந்தையுடன் சென்று ஒலிபெருக்கி கட்டுவது வழக்கம். இது கடந்த காலத்திலும் நடந்திருக்கின்றது இம்முறை சென்றபோது அவரும் தந்தையுமாக கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிகின்றபோது அந்த மாணவனுக்கு ஐந்து, ஆறு வயதுதான் இருந்திருக்கும். அவர் விடுதலைப் புலிகளுக்கோ, யுத்தத்திற்கௌ எந்தவித சம்பந்தமும் இல்லாதவர். அவர் எந்தவொரு விடயமுமோ தெரியாத ஒருவர். அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்வது என்பது ஒரு மிக அநியாயமான விடயம் என்றே நான் கருதுகிறேன். அப்படியானவர்களை விடுதலை செய்வதற்கு அமைச்சர்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்ததாக நகுலேஸ்வரன் சங்கரப்பிள்ளை என்பவர் விடுதலைப் புலிகளின் ஒரு முன்னைநாள் போராளி. இவர் புனர்வாழ்வு பெற்று ஆயுதப்போராட்டத்தை விட்டு முன்னைநாள் போராளிகள் கட்சி ஒன்றை ஆரம்பித்து நாங்கள் ஐந்து கட்சிகளாக இயங்குகின்ற எங்களுடைய கூட்டணியிலே அவரும் அதில் இயங்கிக் கொண்டிருக்கின்றார்.

அவர் முன்னாள் போராளிகள் கட்சியிலே உப தலைவராக இருக்கின்றார். அவர் செய்த குற்றமெல்லாம் அவருடைய அலுவலகத்திலே அதாவது அந்தக் கட்சியினுடைய அலுவலகத்திலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வயோதிபர்களுக்கு உலருணவு வழங்கியது. இதற்காக அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தமட்டிலே பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்று நாங்கள் திரும்பத் திரும்ப கேட்கிறோம். நீங்கள் அதை மாற்ற வேண்டும், திருத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்கிறார்.

https://youtu.be/t079Wh-hCXs?si=C9qg-JFdBd8vcLxb

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு