திருகோணமலை- தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக மழைகாலம் என்பதனால் வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரிஹால் அமல் ஹாஜர் என்ற நான்கு வயது முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தந்தை வீட்டின் முன்பாக வாகன பற்றரி மாற்றிக் கொண்டிருந்த போது சிறுமி அருகில் இருந்துள்ளார். வேலை மும்முரத்தில் மகள் கூட அருகில் இருந்ததை தந்தை கவனிக்க தவறியுள்ளார்.
இந்த சமயத்தில் வாய்க்காலில் சிறுமி சென்றபோது அவர் அணிந்திருந்த செருப்பொன்று தவறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.
அதை எடுக்க முயன்றபோது சிறுமி வாய்க்காலுக்குள் தவறி விழுந்து உயிர் இறந்துள்ளார்.
https://youtu.be/t079Wh-hCXs