திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (02) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த இளைஞரை பைசல் நகர் பிரதான வீதியில் வைத்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து 05 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யும்போது குறித்த இடத்தில் இருந்து தப்பி ஓடியவர் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.