விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற போரை தடுக்க தவறியது யார்!

Share

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் இடம்பெற்ற போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே தேரர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தேஷபந்து தென்னகோன் தவறியுள்ளார் எனும் குற்றச்சாட்டையும் கத்தோலிக்க திருச்சபை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு நிருபிக்கப்படுமாயின் விடுதலைப்புலிகளுடனான போரை தடுக்க தவறிய குற்றச்சாட்டுக்கு யார் பொறுப்பேற்பது என தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை வெளியிட்டுள்ள எதிர்ப்புக்கு பின்னால் வேறு மறைக்கப்பட்ட திட்டங்கள் இருப்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு