மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (27.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்விற்காக ஈகைச் சுடர் ஏற்றுவதற்காக மாவீரர்களின் உறவுகள் காத்திருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது திடீரென உள் நுழைந்த பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட கொடிகளை அகற்றி நினைவேந்தலை குழப்பும் நடவடிக்கையிலும் இடுபட்டனர்.
இதனை கண்டித்து அங்கு சமூகமளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/5QNOYxD7sH8