இந்தியா உருவாக்கும் போலிப்புலிகள்!

Share

இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனத்தின் உளவாளிகளாக செயற்பட்டுவரும் துரோகி சிறிஸ்கந்தராசா (சேரமான்) மற்றும் சிவந்தன் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை இந்தியா உருவாக்கி வர முயற்சித்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் கிளை கட்டமைப்பில் இருந்து பணமோசாடிகளாலும், நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவும் விலக்கப்பட்ட சிலரைப் பயன்படுத்திப் போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்திய வெளியகப் புலனாய்வு நிறுவனமான றோ உருவாக்கிவருவது பற்றிய நம்பகமான தகவல்கள் புதுடில்லியில் இயங்கும் சவுத் புளொக் (South Block) பிரிவுடன் தொடர்பைப் பேணி வரும் முன்னணி வட இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக கசிந்துள்ளது.

அவ்வாறான நபர்களே தேசியத் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாகவும் போராட்டத்தை முன்னெடுக்க தலைமை தாங்கப் போவதாகவும் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ தேசியத் தலைவர் தம்முடன் தொடர்புடன் உள்ளார் என்றும் அவரை ப.சிதம்பரம் ஊடாக இந்திய ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு தற்போது இந்தியாவின் பாதுகாப்பில் உள்ளார் என்றும் பல நச்சுக் கருத்துகளை இக்குழு விதைத்து வருகின்றது.

இக்கருத்துகளை உலகத் தமிழர்களிடையே ஆழமாக வேரூன்ற வைத்து விட்டால், அதன் பின்னர் றோ நிறுவனத்தால் உருவாக்கப்படும் போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தமிழீழ தாயகத்தில் களமிறக்குவது இலகுவானது என்றும்
அவர்கள் மூலம் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் பிரச்சாரம் அடுத்த கட்டமாக நடைபெற ஏற்பாடாகி உள்ளதாகவும்
புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இலங்கையில் அதிகரித்துள்ள சீன-அமெரிக்க ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு விடுதலைப் புலிகளின் பெயரால் சில குண்டுவெடிப்பு தாக்குதல்களை மேற்கொண்டு இந்தியாவின் பிராந்திய நலனை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் என்பவருடன்
(National Security Advisor-Ajit Kumar Doval)
கேணல் தர இந்தியப் படையப் புலனாய்வுத்துறை அதிகாரி உரையாடிய பதிவுகளும் கசியத் தொடங்கியுள்ளது.

தமிழீழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த பாதகச் செயல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் முற்றுப்பெறவில்லை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

எனவே இவ்வாறான இந்தியச் சதியை முறியடிக்க தமிழினம் விழிப்புணர்வோடு செயற்படுமாறும் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் போராளிகள் தெரிவித்து வருகிறார்கள்.

பெரும் உளவியல்போரையும் எமது இனத்திற்கு எதிரான சதித்திட்டங்களையும் அரங்கேற்றிவரும்
இவ்வாறான சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு
ஒவ்வொரு தமிழரும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் தொடர்ந்து பயணிப்போம்.

https://youtu.be/5QNOYxD7sH8?si=BrFG-MkyjcMpJmT2

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு