யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (26.11.2023) வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கேக் வெட்டி, வல்வெட்டித்துறை பாரம்பரிய உணவு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.