கிழக்கை புறந்தள்ளிய எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை என சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளருமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை பிரிக்கும் வகையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
மேலும் தெரவிக்கையில்
வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதில் அளித்த போதே முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.