இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலமான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ச்சியான மழைவீழ்ச்சியின் காரணமாக செல்லக்கதிர்காமம் தற்போது நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் நிரீல் மூழ்கியுள்ளது.
கோயிலின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.