துண்டிக்கப்பட்ட மின்சாரக் கணக்குகளை மீள் இணைப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் தற்போது மின் இணைப்புக்கு 3000 ரூபாய் மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
500 ரூபா அல்லது 1000.ரூபா உள்ளவர்களுக்கு கூட இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. எனவே கட்டணத்தை திருத்தம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என்றார்.
மேலும் மின் கட்டணத் தொகைக்கு ஏற்றவாறு கட்டணங்களை திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே கட்டணம் ரூபா 1000-2000 குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.