மட்டக்களப்பில் பழரசம் விற்பனை செய்தவருக்கு அபராதம்!

Share

மட்டக்களப்பில் அதிகளவான இரசாயன பதாத்தங்களைக் கலந்து பழரசங்களை விற்பனை செய்து வந்த உற்பத்தியாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக 2,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பழத்தை பருகிய சிலர் அதில் கசப்புத்தன்மை இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையை அடுத்தே குறித்த பழரசத்தில் அளவுக்கு அதிகமான இரசாயணப்பதார்தங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த போதே விற்பனையாளருக்கும், விற்பனை முகவருக்கும் நீதிமன்றம் 2,40,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு