தாயக விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாள் இந்த வார தொடக்கத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் சில விஷமிகளாலும் காவல்துறையினராலும் தொடர்ந்தும் தடைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
அந்தவகையில் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி இன்று(23) வாழைச்சேனை காவல்துறையினரால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காவல்துறையினரால் சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று குறித்த தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.