அதிபரின் வற்புறுத்தலில் பொலித்தீன் உண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்!

Share

நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர், பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்தியதை அடுத்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மாணவர்களின் மதிய உணவு இடைவேளையின் போது நிகழ்ந்துள்ளது, 33 மாணவர்கள் உள்ள வகுப்பில் ஏழு மாணவர்கள் தங்கள் உணவை பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களில் சுற்றப்பட்டு கொண்டு வந்தனர்.

இந்த ஏழு மாணவர்களும் பொலித்தீன்களை பாடசாலைப் பைகளுக்குள் போட முற்பட்ட போது, ​​அதிபர் தலையிட்டு, பொலித்தீன் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை அவ்விடத்திலேயே உண்ணுமாறு உத்தரவிட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் அதிபரின் உத்தரவுக்கு இணங்கி, தீங்கு விளைவிக்கும் பொருட்களை சாப்பிட்டனர்.

பாதிக்கப்பட்ட ஏழு மாணவர்களில், இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://youtu.be/yclbuYY3Nd0?si=YPbfqQwpc2FW2gWx

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு