ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் இரண்டு தேர்தல்களும் பிற்போடப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளார்.
தேர்தலை நடத்த நாங்கள் பயப்படுகிறோம் என எப்படிச் சொல்ல முடியும்? தேர்தல்கள் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சகல உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களையும் அடுத்த வருடம் நடத்த முடியும் என தெரிவித்த ஜனாதிபதி அதனை நடத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
https://youtu.be/yclbuYY3Nd0?si=YPbfqQwpc2FW2gWx