எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பிய போது இடைமறித்த சனத் நிஷாந்த அவரின் கையில் இருந்த கோப்புக்களை பறித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையூறு விளைவித்த சனத் நிஷாந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் கேள்வியொன்றை எழுப்ப முயன்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையாக கூச்சலிட்டு அதற்கு இடையூறு விளைவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடத்தில் இருந்து எழுந்துச் சென்று எதிர்க்கட்சி தலைவருடன் முரண்படும் வகையில் செயற்பட்டார்.
இந்நிலையில் 27.2 இன் கீழ் சபாநாயகரின் அனுமதியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியை சமர்ப்பித்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்கட்சித் தலைவருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.