சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் கைது!

Share

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் ஏனைய மூவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த மருந்து நிறுவன உரிமையாளரையும், சுகாதாரத் துறையின் மேலும் இரண்டு அரச உயர் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டதை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சின் வழங்கல் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர ஆகியோர் தரமற்ற மருந்து நிறுவன உரிமையாளருக்கு உதவிய இரண்டு சிரேஷ்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டனர்.

இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை அந்த மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி நடந்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

https://youtu.be/i_4Ip2Rw0yw

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு