யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதன் காரணமக யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது வாக்குமூலத்தில் பொலிஸாரால் தனக்கு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தின் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/i_4Ip2Rw0yw