தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27இல் தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படும்.
அந்த வகையில் மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடகிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அதற்கான ஏற்பாடுகளும் ஏற்பாட்டு குழுவினரால் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.