வவுனியா ஏ 9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தரும் முதியவர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாந்த சோலைப் பகுதிக்குள் திரும்புவதற்கு முற்பட்ட வயோதிபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த அதேவேளை
படுகாயமடைந்த முதியவர் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.