இம்முறை நினைவுகூற ஏற்பாடாகிவரும் மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நினைவேந்தலை நினைவேந்துகின்ற காலம் நெருங்கும் வேளையில் ஶ்ரீலங்கா பொலிசார் இவ்வாறு நீதிமன்றங்களை நாடுவது வழமை என மாவீரர்களது உறவுகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவ்வழக்கு தொடர்பான கட்டளை எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.