தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 750 ரூபாவை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரினார்.
புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கை 20,000-இல் இருந்து 30,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.