300ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்படும் சீனியை 275ரூபாவிற்கு விற்பனை செய்வது எவ்வாறு?

Share

கொழும்பில் மொத்த சீனி இறக்குமதி யாளர்களிடம் ஒருகிலோ கிராம் சீனி 300ரூபாவிற்கு கொள்வனவு செய்து, கட்டுப்பாட்டு விலையான 275 ரூபாவிற்கு எவ்வாறு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்ய முடியும். இவ்வாறு வவுனியா வர்த்தகர்கள் கேள்வி எழுப்புவதுடன். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஒருகிலோ கிராம் சீனி 275ரூபாவிற்கு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்வதற்கு அரச வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் புறக்கோட்டை மொத்த சீனி இறக்குமதியாளர்களிடம் ஒரு கிலோ கிராம் சீனி 300ரூபாவிற்கு கொள்முதல் செய்து இங்குள்ள சில்லறை வர்த்தக நிலையங்களில் எவ்வாறு கட்டுப்பாட்டு விலையான 275ரூபாவிற்கு விற்பனை செய்யமுடியும்.

எனவே எமது வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையான 275ரூபாவிற்கு சீனியை விற்பனை செய்வதற்கு கொழும்பு இறக்குமதியாளர்களிடமிருந்து கட்டுப்பாட்டு விலையில் பெற்றுகொள்வதற்கு அரசாங்க அதிபர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வவுனியா வர்த்தகர் சங்கம் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிக விலையில் ஒரு கிலோ கிராம் சீனி 300ரூபாவிற்கு விற்பனை செய்யும் சீனி மொத்த இறக்குமதியாளர்கள் என குறிப்பிட்ட சிலருக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்போது. இங்குள்ள வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு