ஒட்டிசுட்டானில் மூவர் கைது!

Share

முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (16) இரவு 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி லொறி ஒன்றில் மாடுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முத்தையன்கட்டு பகுதியில் இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒட்டிசுட்டான் பொலிசார் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி இல்லாமல் மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.

சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவரும் புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து இரண்டு மாடுகளும், கன்று ஒன்றுமாக மூன்று மாடுகள் இறந்த நிலையிலும் , இரண்டு மாடுகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும் ஏனைய இரண்டு மாடும் ஒரு கன்றுமாக மொத்தமாக 8 மாடுகளும் அவற்றை கடத்தி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி வாகனம் ஒன்றையும் ஒட்டிசுட்டான் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரி.சுபேசன் தலைமையில் பொலிஸ் கொஸ்தாபல்களான (103114) சதுரங்க, (98305) வீரசிங்க ஆகிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் வாகனத்தை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (16) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் இம்மாதம் 28 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கவும், இறந்த மாடுகளை புதைப்பதற்கும், ஏனைய மாடு, கன்றினை ஒட்டுசுட்டான் விவசாய திணைக்களத்திற்கு கொடுக்குமாறும் நீதவானால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு