யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் 

Share

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார்.

இதன்போது மாணவர்கள் சிலரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா மீண்டும் தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டுமெனத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட குறித்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டமானது இன்று விஞ்ஞான பீட வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு