இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மையப்பகுதியில் -பாதுகாப்பு அமைச்சு

Share

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்துவிட்டது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4,100 சிறுவர்கள் உட்பட 2640 பெண்களும் இதுவரை கொள்ளப்பட்டுள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மையப்பகுதியில் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

தொடரும் போரானது, இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ளநிலையில், போர் நிறுத்தம் அல்லது போர் “இடைநிறுத்தம்” செய்வது போன்ற சர்வதேச அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும், “பணயக்கைதிகள் திரும்பாமல் மனிதாபிமான போர் நிறுத்தம் இருக்காது” என்று அமைச்சர் கேலண்ட் கூறினார்.

முன்னதாக இஸ்ரேலின் தாக்குதலால் 10,300க்கும் அதிகமான பொதுமக்கள், பெரும்பாலும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இதற்கு முன்னரும் 4 முறை போர் ஏற்பட்டிருந்தாலும், இஸ்ரேல் உருவான 75 ஆண்டுகளில், இத்தனை குறுகிய காலத்தில் மிக அபாயகரமான போராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு