இன்று (07) நாடாளுமன்றத்தில் என்னுடைய நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய மட்டக்களப்பில் மக்களுக்கு எதிராக பல அடாவடிகளை நிகழ்த்தி வரும் மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தொடர்பான பிரேரணை தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிஸார் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதனை வலியுறுத்தியிருந்தேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவ்விடையத்தை இவ் தேரர் வேறு வகையில் திரிவுபடுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வெருவரையும் துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
இவ்வாறாக என்னையும் நான் பிரதிநுவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இவ் புத்த பிக்குவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன் என தெரிவித்தார்.