எங்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் எங்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்தலாம் என்பதை இலங்கையின் காவல்துறை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் ஒன்றாகவே பயணிக்கும்.இலங்கை காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் சிவகஜன் தெரிவித்தார்.
நேற்றையதினம் ஏறாவூர் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு வரமாட்டார்கள் என்று என்னுகின்றார்கள்.அது ஒருபோதும் நடைபெறாது என்பதையும் இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ளவிரும்புகின்றோம்.
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியும் பாரம்பரியம் கிழக்கு பல்கலைக்கழத்திலும் இல்லை யாழ் பல்கலைக்கழகத்திலும் இல்லையென்பதை மாணவர்கள் சமூகமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.