மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளையும் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மாணவர் சமூகமாக யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்க மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் போராட்டக் களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.