நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் பல இடங்களில் உணரப்பட்டது. இதேபோன்று சீன எல்லைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (நவ.3) இரவு 11.32 மணியளவில் நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பிரதேசங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை காலை 7 மணி நிலவரப்படி 72ஆக அதிகரித்துள்ளது.
நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் மற்றம் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கிரீஸின் ஈவியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இதேவேளை, கிரீஸின் ஈவியா தீவில் நேற்று (03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீவின் மான்டூடி நகருக்கு அருகேயும், தலைநகர் ஏதென்ஸுக்கு 90 கிலோமீற்றருக்கு தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிச்டர் 5.1 அலகுகளாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.