இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வரவேற்ற ஜீவன்!

Share

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும்,  மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்வு நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு