ஒரு பெரிய தொழிற்சாலையின் தலைவர் ஒரு ஹோட்டல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிங்கராஜா வனப்பகுதியில் உள்ள கொங்கலா மலையின் அடிவாரத்தில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை ழிப்பதாகவும், இதற்கு அரசாங்கத்தின் சக்திவாய்ந்த இரண்டு அரசியல்வாதிகள் ஆதரவளிக்கின்றனர் எனவும் நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர கூறுகிறார்.
கொலொன்ன பிரதேச செயலகத்திற்குட்பட்ட உள்ளிடுவ கிராம அதிகாரியின் எல்லைக்குட்பட்ட ஹெஸ்வத்த, கொங்கல பிரிவில் அமைந்துள்ள இந்த பிரதேசத்தில்தான் கிங் கங்கையின் நீரோடைகள் ஆரம்பிக்கும் எனவும், இப்பிரதேசத்தில் அமைந்துள்ள புல்வெளி அமைப்பு மற்றும் ஈரநில அமைப்பு யானைகள் மற்றும் புலிகள் போன்ற விலங்கு இனங்களின் பிரதான வாழ்விடமாகும் எனவும் சஜீவ சாமிகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் நிலச் சீர்திருத்த ஆணையத்துக்குச் சொந்தமானது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த இடத்தில் ஐந்து ஏக்கர் புல்வெளிகளும், இரண்டு ஏக்கர் காடுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர, இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.