பதாகைகளுடன் வீதிக்கு வந்தால் கொடூரத் தாக்குதல்; அரசு தயாராகிறது

Share

தாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கோரி மக்கள் பதாகைகளுடன் வீதிக்கு வந்தால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கலைக்கப்படுவார்கள் என்ற நிலையை அரசு ஏற்படுத்தி வருவதாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் பலரை சிறையில் அடைத்து சமூகத்தில் சில கருத்தியல்களை பலப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் நடத்திய போராட்டம் கொடூரமாக தாக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசப் பல்கலைக்கழகங்களில் பல குறைபாடுகள் இருந்தாலும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு ஏற்கெனவே இரண்டு சர்வதேசப் பல்கலைக்கழக உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதே அனுமதியை இன்னும் பலருக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு