20ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் இணைந்து இன்று(30)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை-கோமரங்கடவல பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ‘அரசே நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளே, மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தை குறை, 20 ஆயிரம் சம்பளத்தை அதிகரி, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளத்தை அதிகரி போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.