என்னை தெற்கில் இனவாதியாக சித்தரிக்க முயற்சி

Share

தெற்கிலே வாழும் சிங்கள மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமன ரத்ன தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அம்பிட்டிய சுமன ரத்ன தேரரால் தமிழர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இனவாத கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தெற்கிலே தன்னை ஒரு இனவாதியாக சித்தரிப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவரது செயற்பாடுகள் மூலம் எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி இலாபம் சம்பாதிக்க முயற்சிக்கின்றன.

“இவ்வாறு கடந்த காலங்களில் இன மத முறுகளை தோற்றுவித்ததன் பேரில் பலரை இந்த அரசாங்கம் கைது செய்திருந்தது.ஆனால் தற்போது தமிழர்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை தெரிவிக்கும் இவ்வாறான தேரர்கள் மீது அரசாங்கம் ஏன் சட்டத்தை பிரயோகிக்க மறுக்கிறது? இவர்கள் மீதும் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும். நியாயம் வழங்கப்படவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு