கிழக்கில் புதிதாக முளைக்கும் சிங்களக் குடியேற்றங்களின் பின்னணியில் புலனாய்வாளர்கள்

Share

கிழக்கில் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மக்களுக்கு காணிகளைப் பகிரும் திட்டத்தை புலனாய்வாளர்களே செயல்படுத்துகின்றனர். இதற்காக காவி உடை தரித்த குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளது என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க.

இந்த காவி உடை தரித்த குழுவில் உள்ள சிலரை ஐ.எஸ் ‌முத்திரையுடன் களமிறங்குபவர்கள் வெட்டிக்கொலை செய்வார்கள், அதன் பின்னால் நாட்டில் எவ்வாறானதொருநிலை ஏற்படும்? அடுத்த தேர்தலை இலக்கு வைத்த வியூகமாக இது இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார் .

பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே, கீர்த்தி ரத்னாயக்க மேற்படி பகிர்வு தகவுகளை வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி ரத்னாயக்க இந்தியாவின் ‘றோ’அமைப்பின் உளவாளி என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்கானவர். அவர் அதனை நிராகரித்தும் உள்ளார்.மேற்படி நேர்காணலின் போது அவர் கிழக்கு விவகாரம் தொடர்பில் வெளிப்படுத்திய முக்கியமான தகவல் வருமாறு:-

கிழக்கில் காணி பகிர்வு தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை யார் செய்வது? அம்பிட்டிய சுமன தேரர் என்ற புதுமையான தேரரும், எங்கிருந்து வந்தார்கள் என்பதை அடையாளம் காணமுடியாதுள்ள இதனைச் செய்கின்றனர்.இது தொடர்பில் தேடிப் பார்த்தேன். தகவல்கள் கிடைத்தன. இதன் பின்னணியில் மிகவும் சூட்சுமமான முறையில் வேலைத்திட்டமொன்று இடம்பெறுகின்றது.

கிழக்கில் காணிப் பகிர்வு மற்றும் சிங்கள மக்கள் குடியேற்றம் போன்ற நடவடிக்கையில் காவி உடை தரித்த சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறிவது கடினமாக உள்ளது. இது புலனாய்வு பிரிவின் “கேம்” ஆகும்.

காவி உடை தரித்தவர்கள் புலனாய்வு பிரிவினரால் அனுப்பப்பட்ட நபர்களாக இருக்கலாம்.எனக்குக் கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் இன்னும் சில மாதங்களில் அதாவது இந்திய தேர்தலுக்கு முன்னதாக, அந்த காலப்பகுதியில் இலங்கையிலும் தேர்தல் வரும். ஐ‌.எஸ். முத்திரை குத்தப்பட்ட சிலரால் இந்த காவி உடை தரித்தவர்களின் மூன்று, நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்படலாம். ஐ.எஸ். முத்திரை குத்தப்பட்டவர்கள் காவி உடை அணிந்தவர்களை வெட்டிக்கொன்றால் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும்? அப்போது தேசத்தை காக்கும் நாயகன் என்ற கோக்ஷம் எழும். தேசத்தின் காவலன் எனக் கூறப்பட்ட கோத்தாபய ராஜபக்சவுக்கு வயது போய்விட்டது. விஜயதாச ராஜபக்க்ஷ இளமையானவர், தான் அந்த இடத்துக்கு வரலாம் என அவர் நினைக்கின்றார்.

ஐ.எஸ் என்பது அதிகாரத்துக்கு வருவதற்கு பயன்படுத்தப்படும் சிறந்த கருவியாக உள்ளது. மத்திய கிழக்கிலும் புலனாய்வாளர்களால்தான் ஐ.எஸ். உருவாக்கப்பட்டது .இலங்கையிலும் வேலை திட்டமொன்றை முன்வைத்து மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதற்காக ஐ. எஸ் .மற்றும் முஸ்லிம் விரோதப் போக்கை பின்பற்றுகின்றனர் என்றார.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு