‘அமைச்சரவை மாற்றம்’- தன்னிச்சையாக செயற்பட்ட ரணிலுக்கு நாமல் எதிர்ப்பு

Share

கூட்டு அரசியல் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறந்த புரிதல் இருக்க வேண்டும். அமைச்சரவை திருத்தங்களினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கூட்டணியின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து கூட்டணியின் கட்சிகளுக்கு இடையில் எவ்வாறு இணக்கப்பாட்டை பேணுவது என்பதை ஜனாதிபதி அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் போது இரு தலைவர்களும் இரு திசைகளில் சென்றனர். அதன் விளைவுதான் நாட்டில் ஸ்திரமற்ற பொருளாதார நிலை ஏற்பட்டது.

எதிர்கால தீர்மானங்களை மேற்கொள்வது மற்றும் கூட்டு அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் கூட்டணித் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடுவது பொருத்தமானதாக இருக்கும்.

அமைச்சரவையை திருத்த ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. எவ்வாறாயினும், இது தொடர்பாக சக கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் எதுவும் இல்லை. சில குழுக்கள் அவ்வாறான பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன“ என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு