முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபர் தாக்கியதாக தெரிவித்து சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவில் இருந்து சிலாவத்தை ஊடாக மாங்குளம் நோக்கி நேற்று (24.10.2023) மாலை சென்று கொண்டிருந்த பேருந்து சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்தது. அந்நேரம் குறித்த இ.போ.ச பேருந்தினை நெருங்கிய ஹயஸ்ரக (KDH) வாகனத்தில் வந்த நபர் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.
இதையடுத்து தாக்கப்பட்டவர் நேற்று இரவு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக முல்லைத்தீவு வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இது வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. வருகைதந்த (KDH) வாகனத்தின் இலக்கம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.