‘மின் கட்டண அதிகரிப்பு’ – எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படுவதில் சிக்கல்

Share

மின் கட்டணம் 18 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தார்.

இதனை பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் கபில நாவுதுன்ன கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய பொருளாதார நிலைமையினால் எரிபொருள் விற்பனை ஏற்கனவே பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பால் நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் பாதிக்கும்.

தற்போது செலவுகள் அதிகரிப்பதுடன் தினசரி விற்பனையும் குறைந்து வருகிறது.

எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் திருப்திகரமானது. இது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும்.” எனவும் தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு