மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துரதிஷ்டவசமாக மலேசியாவில் மென் பொறியியலாளர்களாளாக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற போது அவர்களது சிறிய மகளும் காரில் இருந்ததாகவும், எனினும், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவருக்கும் 35 வயது எனவும் அவர்களது உடல்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோலாலம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.