ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக ஜனாதிபதி செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க வாய்ப்பு இருப்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு செய்யக்கூடிய பல விடயங்கள் இருப்பதாகவும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் திறனை அக்கட்சி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவ்வாறு சந்தர்ப்பவாதியாக நான் செயல்பட மாட்டேன். அமைச்சர்கள் நீக்கப்படுவதால் பயன் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் செய்யக்கூடிய பல விடயங்கள் இருப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.